நாங்கள் செய்வதை நம் விவசாயிகள் விரும்புகிறார்கள்

We offer various crop advisory services like pest, disease, water management, etc. to farmers.

With its inception as a pilot project and registration as a non-profit entity, "Parachute Kalpavriksha Foundation" has become a game changer in the lives of farmers who have enrolled under the various programmes run by the foundation, which provide all kinds of support, starting from imparting knowledge and training for disease management, pest control, and water management to providing farm inputs at affordable prices. During the last five years, the teams of experts have reached thousands of farmers, helping them to undertake best farm practices through modern scientific techniques, which have really improved yield quality and quantity. Here are a few short video clips of our farmers, who have benefited from various programmes of the Parachute Kalpavriksha Foundation.

நம்ம விவசாயிகளின் பொன்னான வார்த்தைகள்

பொள்ளாச்சி

செந்தில்வேல்

எனது பண்ணையில் 300க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. எனது விவசாய முறைகள் அவ்வளவு ஒழுங்கமைக்கப்படவில்லை, அதனால், நல்ல விளைச்சலைக் கொடுப்பதற்காக எனது மரங்களை வளர்ப்பதில் பல சிரமங்களை எதிர்கொண்டேன். அதிர்ஷ்டவசமாக, 2018 ஆம் ஆண்டில், பாராசூட் கல்பவ்ரிக்ஷா அறக்கட்டளையின் பிரதிநிதிகள் எனது பண்ணைக்கு அடிக்கடி வருகை தந்து, பல்வேறு நுட்பங்களைப் பற்றி எனக்குக் கற்றுக்கொடுத்து, பூச்சித் தாக்குதலில் இருந்து எனது பண்ணையைக் காப்பாற்றினர். முந்தைய விளைச்சலைக் காட்டிலும், இந்த ஆண்டு எனது பண்ணையில் கணிசமான அளவு அதிகரிப்பு கிடைத்துள்ளது

பொள்ளாச்சி தெற்கு

ஆர் நடராஜன்

1974 முதல் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன்.எனக்கு விவசாயத்தில் அனுபவம் இருந்தாலும், காண்டாமிருக வண்டுகள் போன்ற பூச்சிகள் மரங்களை தாக்கியதில் சிக்கிக்கொண்டேன். பாராசூட் கல்பவ்ரிக்ஷா குழு, பூச்சிகளை எப்படிப் பிடிக்கலாம் என்பது பற்றிய தெளிவான உத்திகளுடன் எனக்கு வழிகாட்டியது. பாராசூட் கல்பவ்ரிக்ஷா அறக்கட்டளை, ஒரு மரத்தின் விளைச்சலை அதிகரிப்பதற்கான நீர் மேலாண்மை நுட்பங்கள் மற்றும் வறட்சி காலங்களில் தண்ணீரை சேமிப்பதற்கான உத்திகள் பற்றிய அறிவையும் பகிர்ந்து கொண்டுள்ளது. அவர்கள் மாதம் ஒருமுறை எனது பண்ணைக்கு வந்து விவசாயத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றி எனக்கு வழிகாட்டுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

சுப்பே கவுண்டன்புதூர்

ஆர்.திரிபுரசுந்தரி

25 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். தண்டு ரத்தக்கசிவு நோய் நமது தஞ்சாவூர் மரங்களை அதிக அளவில் பாதித்தது. எனவே, பாராசூட் கல்பவ்ரிக்ஷா அறக்கட்டளை குழுவை ஆய்வுக்கு அழைக்க முடிவு செய்தோம். ஆய்வுக்குப் பிறகு, அவர்களின் குழு நோயை சரி செய்ய எங்களுக்கு வைத்தியம் பரிந்துரைத்தது. அந்த நுட்பங்களைப் பயன்படுத்தி, ஒரு மரத்தில் அதிக விளைச்சளைப் பெறுவதற்குப் பயனளிக்கும் மண்ணில் நைட்ரஜன் அளவு அதிகரித்ததைக் கண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டோம். பாராசூட் கல்பவ்ரிக்ஷா அறக்கட்டளை விவசாயிகளுக்கான சேவைக்காக நான் முழு மனதுடன் நன்றி கூறுகிறேன்! தொடர்ந்து விவசாயிகளுக்கு சேவை செய்யுங்கள்.

நாங்கள் செய்வதை நம் விவசாயிகள் விரும்புகிறார்கள்

குமார், பொள்ளாச்சி
ரவி, பொள்ளாச்சி
ஆர். திரிபுரசுந்தரி, கவுண்டன்புதூர்